மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் அங்கிருந்து மாற்றப்படும் என்ற செய்தியில் முற்றிலும் தவறானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடரை பிரித்தானியாவிற்கு மாற்றுவதற்கான எவ்வித பரிந்துரையும் செய்யப்படவில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன அறிவித்துள்ளன
இப் போட்டியை இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க கிரிக்கெட் சபையின் குறைந்தபட்ச நிர்வாக ஈடுபாட்டுடன் புளோரிடா, டல்லாஸ் மற்றும் இன்னும் ஒரு இடத்தில் சம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த பரிசீலிக்கப்படுகிறது.