மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் நட்பு நாடுகளுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தென் அமெரிக்காவில் மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அறிவித்துள்ளார்.
இன்று அதிகாலையில் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி, வெனிசுவேலா, கியூபா மற்றும் நிகரகுவா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிக்கப்பட்ட நாடுகளுக்கும் அரசமுறைப் பயணத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்ராஹிம் ரைசி ஜனாதிபதியாக பதவியேற்று 21 மாதங்களில் மேற்கொள்ளும் 13வது வெளிநாட்டுப் பயணம் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐந்துநாள் பயணத்தின் முதலாவது விஜயமாக வெனிசுவேலா செல்லவுள்ளார் என்றும் இந்த விஜயம் இரு நாடுகளும் விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கப்பல் போக்குவரத்து, வாகனம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.