பிரித்தானியாவில் மன்னர் சார்லஸ்ஸின் பிறந்தநாள் கொண்டாட்ட அணிவகுப்பானது எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவ் அணிவகுப்பின் இறுதி ஒத்திகையானது நேற்று முன்தினம் ,லண்டனில் நடைபெற்றது.
இதனை இளவரசர் வில்லியம் நேரில்சென்று பார்வையிட்டார். இவ் அணிவகுப்பின் போது லண்டனில் வெப்பநிலை 30 C (86 F) ஆக இருந்துள்ளது.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அணிவகுப்பில் பங்கேற்று இருந்த இராணுவ வீரர்கள் அடுத்தடுத்து வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளனர்.
இது குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது ஒத்திகையில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் இளவரசர் வில்லியம் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
அதே சமயம் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலுக்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.