உக்ரைனின் தென்கிழக்கில் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று கிராமங்களை எதிர்த்தாக்குதல் மூலம் மீட்டெடுத்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
நேற்று உக்ரைனின் 68வது ஜெகர் படையினால் வெளியிடப்பட்ட காணொளியில், வெடிகுண்டு வீசப்பட்ட கட்டிடத்தில் இராணுவத்தினர் உக்ரேனியக் கொடியை ஏற்றும் காட்சிகள் காணப்பட்டன.
இது டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பிளாஹோடட்ன் என்ற பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் படையினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள உக்ரைனின் ஜனாதிபதி, ஆனால் மோதல் இடம்பெற்ற பகுதிகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.