வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஆழமான உறவுகளின் மற்றொரு அறிகுறியாக விளாடிமிர் புட்டினுடன் கைகோர்ப்பதாக கிம் ஜொங்-உன் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை ரஷ்யாவின் தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் புடினுக்கு அனுப்பிய செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உக்ரைன் மீதான மொஸ்கோவின் படையெடுப்பிற்கு தனது அரசாங்கத்தின் முழு ஆதரவையம் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
நீதி நிச்சயம் வெல்லும் என்றும் ரஷ்ய மக்கள் வெற்றியின் வரலாற்றில் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள் என்றும் கிம் ஜொங்-உன் குறிப்பிட்டுள்ளார்.