இந்நாட்டில் கிட்டத்தட்ட 75 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 57 இலட்சத்திற்கும் அதிகமாகும். அவர்களில் 33% பேர் தற்போது கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பெருமளவிலான உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் மக்கள் மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வாழ்கின்றனர் என தரவுகள் காட்டுகின்றன.
மேலும், கிழக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகளவான குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் உள்ள 37 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளதாகவும் உரிய ஆய்வில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
மொத்த குடும்பங்களில் 65% குடும்பங்கள் வாழ்க்கைச் செலவைப் பூர்த்தி செய்வதில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
மேலும் சில குடும்பங்கள் அன்றாடம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்து, மிகவும் குறைந்த மதிப்பில் சத்தில்லாத உணவைச் சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.