கனடாவில் கனரக வாகனமொன்றின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிடோபா மாகாணத்தில் நேற்றைய தினம் முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே கார்பெரி நகர் அருகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















