அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் சொகுசுக் கப்பலின் சிதைவடைந்த பாகங்களைக் காண, நேற்று முன்தினம்(18) சுற்றுலா பயணிகளுடன் சென்ற ‘ஓஷன்கேட்‘(OceanGate ) நிறுவனத்தின் ‘டைடன்‘ என்ற நீர்முழ்கிக் கப்பல் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பயணித்தவர்களின் விபரங்கள் இதுவரை வெளியாகாமல் உள்ள நிலையில், மாயமான நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி 22,00பேருடன் பயணித்த டைட்டானிக் கப்பலானது அட்லாண்டிக் கடல் பகுதியில் பனிமலையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 1,600 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.