துப்பாக்கிப் பாவனையினால் அதிகரித்து வரும் கொலைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றவியல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கிய நேர்காணலில், வெளிநாட்டவர்கள் இந்நாட்டில் முதலீடு செய்யும் போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகக் தெரிவித்திருந்தார்.
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கையை விடவும் இவ்வருடம் இதுவரை அதிக எண்ணிக்கையிலான மனிதக் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சமூகத்தின் பாதுகாப்பு அழிந்து வருவதாக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.