தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் நடைபெறும் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேற்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அங்கீகரிக்கப்படாத அல்லது உரிமம் பெறாத துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை கையளிக்க ஜூலை 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவ்வாறான அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து தகுதியான அதிகரிகளை உரிய பதவிகளுக்கு நியமிக்குமாறு அமைச்சர் டிரான் அலஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை தென் மற்றும் மேல் மாகாணங்களில் கொலை குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம் குறித்த மாகாணங்களில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் திறமையின்மை மற்றும் அலட்சியப் போக்கே காரணம் என பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.