விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
விசா காலம் முடிவடைந்து நாட்டில் சட்டவிரோதமாக 7 நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 250 டொலர் அறவிடப்படும்.
மேலும் விசா காலம் முடிவடைந்து நாட்டில் சட்டவிரோதமாக 14 நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 500 டொலர் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபராதத்துடன், விசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.