ஹம்பம்தோட்டை சிறிபோபுரவில் தனது வீட்டிற்கு வெளியே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி இடிந்து விழுந்ததில் முன்னாள் சுகாதார அமைச்சரான வைத்தியர் பி.என்.பி. சிரில் தனது 89 வயதில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று அவரது வீட்டின் 3 ஆம் தட்டில் இடம்பெற்று வரும் பழுதுபார்க்கும் பணியை ஆய்வு செய்வதற்காக அவரும் அவரது சாரதியும் குறித்த மின்தூக்கியைப் பயன்படுத்தியுள்ள நிலையிலேயே குறித்த மின்தூக்கி திடீரென கீழே விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அமைச்சரும் அவரது சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அமைச்சர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
1977 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்த அமைச்சர் சிரில், திஸ்ஸமஹாராம தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.