ரஸ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு உக்ரேனுக்கு புதிதாக உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
73 தசம் 5 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான உதவிகளை வழங்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரேனின் வெற்றிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் அமெரிக்க ஜனாதிபதி Joe Biden ஆகியோருக்கிடையில் தொலைபேசி வழியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவினால் ஏற்பட்ட கிளர்ச்சி குறித்தும், உக்ரைனின் தற்போதைய எதிர் தாக்குதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.