நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான வழக்கை 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சனத் நிஷாந்த பொதுஜன பெரமுன கட்சி தலைமைகத்தில் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதிகளைக் கொண்ட நீதிச்சேவை சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் அடங்கிய தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
அதில் இந்த கருத்துக்கள் நீதித்துறைக்கும், நீதித்துறை உத்தியோகத்தர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.