பெரும்போக நடவடிக்கைகளுக்காக உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அம்பாறை மற்றும் வடக்கின் சில மாவட்டங்களிலும் வடமத்திய மாகாணத்திலும் தற்போது பெரும்போக அறுவடை காலம் என்பதனால் மீண்டும் உரமிட வேண்டிய தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது வழங்கப்படும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இரண்டு மாதங்கள் இருப்பதால், யூரியா மற்றும் இதர உரங்களை வாங்க விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த உண்மையை கருத்தில் கொண்டு செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க தீர்மானித்துள்ளோம் எனவே தற்போது வழங்கப்படும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இந்த வருடம் டிசம்பர் இறுதி வரை நீடிக்கப்படும்.
அதன்படி, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை வாங்கிக் கொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.