குருதிக் கொடையாளிகளையும் குருதிக் கொடை முகாம்களை ஒழுங்குபடுத்துபவர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் தாதியியல் கல்லூரியில் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 100 குருதிக் கொடையாளர்களுக்கும், 50 குருதி கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களுக்கும் கௌரவமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலை அதிகாரிகள், இரத்த வங்கி உத்தியோகத்தர்கள்,
தேசிய குருதிமாற்று பிரயோக சேவையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.