பொகவந்தலாவ பகுதியில் 26 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாகப் பொகவந்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது தாய்க்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது குழந்தையின் தொண்டையில் உணவு சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த தாய் நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.