யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 42 வயதான பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த நபர் பாழடைந்த கட்டிடமொன்றுக்குள் மறைத்துவைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் யாழ் மாநகர் ,பளை மற்றும் கொடிகாமம் பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடனும் சந்தேக நபருக்கு தொடர்புள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதேவேளை யாழில் தொலை பேசித் திருட்டில் ஈடுபட்ட இருவர் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து திருடப்பட்ட தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி பறிகொடுத்தவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.