நெருக்கடி காரணமாக தேர்தலை நடாத்த முடியாது என அறிவிக்கப்பட்டால் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்களை அமைச்சருக்கு வழங்குவதற்கான சட்டங்களைத் திருத்துவதற்கான ஜயந்த கடகொடவின் தனிநபர் பிரேரணை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தனிநபர் பிரேரணை மாநகர சபை கட்டளைச் சட்டம், மாநகர சபை திருத்தச் சட்டம் மற்றும் உள்ளுராட்சி மன்றச் சட்டம் ஆகியவற்றில் உள்ள பல சரத்துகளில் திருத்தங்களை அறிவித்துள்ளன.
இதன்படி, 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச, மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 252) மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 255) ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜயந்த கெட்டகொடவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இது அமுல்படுத்தப்பட்டால், தேர்தல் அறிவிக்கப்பட்டு, நெருக்கடி காரணமாக மேற்படி தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில், 12 மாதங்கள் கடந்தாலும் அமைச்சரின் விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்கப்பட்ட ஒரு காலத்திற்கு உள்ளூராட்சி மன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படும்.
தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது. தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீடிப்பதற்கும் தேர்தலுக்கான அபராதத் தொகையை அதிகரிப்பதற்குமான ஏற்பாடுகளை வழங்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவால்,…
தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பு கட்டளைச் சட்டம், ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண…
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. உள்ளூராட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,714 ஆகக் குறைக்க எல்லை நிர்ணய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம், 8,000 க்கும் அதிகமான மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், புதிய எல்லை…