ஸ்பெயினிடமிருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற கட்டலோனியாவில் மேலாடையின்றி பொது நீச்சல் குளத்தில் குளிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்அறிவிப்பினையடுத்து சமூக ஆர்வலர்கள் பலரும் கொண்டாடிவருகின்றனர். கட்டலோனியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் மேலாடையின்றி செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
எனினும் பல நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்லும் பெண்களுக்கு உள்ளே நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக ஒவ்வொரு கோடையிலும் இதுகுறித்த ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது.
குறிப்பாக பெண்கள் மேலாடையின்றி செல்வதைத் தடுப்பது, “தனிமனித சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து மேலாடையின்றி வருகை தரும்பெண்கள் உள்நுழையத் தடைவிதிப்போருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பாலினம், மத நம்பிக்கைகள், உடை உட்பட எந்தவொரு பாகுபாட்டிற்கு எதிராகவும் உள்ளூர் அதிகாரிகள் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பாக தாய்ப்பாலூட்டுவதை அனுமதிக்க வேண்டும் எனவும் கட்டலோனியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.