பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையம் நோக்கி நேற்றிரவு 8.20 மணிக்குப் புறப்பட்ட விமானமொன்று தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சுமார் இரண்டரை மணிநேரத்தில் மீண்டும் இலங்கையை வந்தடைந்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL-455 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் 301 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வேறொரு விமானத்தில் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.