சமையல் எரிவாயு விநியோகம் குறித்து லாஃப்ஸ் நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி லாஃப்ஸ் சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றி நடைபெறும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தமக்கு அருகிலுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விநியோக கிளைக்கு சென்று கொள்வனவு செய்யலாம் என்பதுடன் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 1345 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் லாஃப்ஸ் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவையைத் தொடர்பு கொண்டு கொள்வனவு செய்யலாம் எனவும் லாஃப்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.