இலங்கை தேசிய மகளிர் அணியின் உதவி பயிற்சியாளராக தரிந்து பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி முதல் தரிந்து பெரேராவின் இலங்கை கிரிக்கெட்டுடனான இரண்டு வருட காலப் பயணம் ஆரம்பமானது.
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நான்காம் கட்ட சிறப்பு பயிற்சியாளர் விருதுக்கு சொந்தக்காரரான தரிந்து பெரேரா, வார்விக்ஷயர் கண்ட்ரி கிரிக்கெட் கழகம், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் வெஸ்ட் எண்ட் ரெட் பேக்ஸ் ஆகிய அணிகளுக்கு பயிற்சியளித்த அனுபவமுடையவர்.
உயர் செயல்திறன் பயிற்சியாளராக வார்விக்ஷையருடன் அவர் பணிபுரிந்த போது, அவர் கவுண்டி சம்பியன்ஷிப், றோயல் லண்டன் ஒரு நாள் கிண்ணம், ரி20 வைட்டலிட்டி பிளாஸ்ட் மற்றும் வார்விக்ஷயர் அகாடமியின் போது அதன் பயிற்சிக் குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் வெஸ்ட் எண்ட் ரெட் பேக்ஸ் அணிக்கு துடுப்பாட்டம் மற்றும் சுழற்பந்து வீச்சு துணை பயிற்சியாளராக இருந்து வருகிறார். 2022ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு எதிரான இங்கிலாந்து யங் லயன்ஸ் பயிற்சி போட்டிக்கான உதவி பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
அடிலெய்ட் பல்கலைக்கழக மாவட்ட பிரீமியர் மகளிர் அணிக்கு உதவிப் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2019ஆம் ஆண்டில் யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் மகளிர் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.
இங்கிலாந்தின் லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுப் பயிற்சியில் பிஎஸ்சி ஹானர்ஸ் பட்டம் பெற்ற பெரேரா, எஸ்எஸ்சி, தமிழ் யூனியன் மற்றும் கவுண்டி கிரிக்கெட்டுக்காக நார்தாம்ப்டன்ஷையர் 2வது லெவன் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.