கொழும்பு தேசிய வைத்தியசாலையிலுள்ள அறையொன்றிலிருந்து, ஒருதொகை அரச எதிர்ப்பு சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, அவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 136 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் கைப்பற்றப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மருதானைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.