உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கான தீர்மானம் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் 66 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்ட போது பிரேரணைக்கு ஆதரவாக சமல் ராஜபக்ஷ வாக்களித்ததாக செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த தீர்மானத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சபையில் இருக்கவில்லை என ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் தவறானவை என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.