தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளிக் காரணமாக, திடீரென கடல் சுமார் 200 மீற்றர் உள்வாங்கியமையால், மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன.
தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சியினால் ஏற்பட்டுள்ள மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று காலை முதல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசியுள்ளது.
இதனால், பாம்பன் வடக்கே பாக்கு நீரினை கடல் பகுதியானது திடீரென சுமார் 200 மீற்றர் உள் வாங்கியதால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி சேதமடைந்துள்ளன.
மேலும், அப்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இதனால் மீனவர்களுக்கு மீன் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.