ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக் பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வு உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் நான்கு அதிர்வுகள் 4 ரிச்டர் அளவிற்கு மேல் இருந்ததாகவும், இது லேசான நிலநடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நகரத்தில் உள்ள எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவு நாடான ஐஸ்லாந்தில் கடந்த 2021 மற்றும் 2022-ல் ரெய்க்ஜாவிக்கில் இருநது 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் மலை அருகே எரிமலை வெடிப்பு உண்டணமையும் குறிப்பிடத்தக்கது. .