ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக் பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் 4700 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வுகள் அப்பிரதேசங்களில் நிலச்சரிவு அபாய நிலைமையை அதிகரித்துள்ளதாக அரச நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
அதிகரித்த நில அதிர்வுகள் மற்றும் எரிமலை சாம்பல் ஆகியவை எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அபாய நிலைமையை ஏநற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிமலை 2021 மற்றும் 2022 இல் தொடர்ச்சியான வெடிப்பு சம்பவங்களை ஏற்படுத்தியிருந்ததுடன், கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்தவித வெடிப்புச் சம்பவங்களையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.