மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தெளிவு படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
இலங்கையில் குற்றமிழைத்த ஒருவர், சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். எப்போது இவரை கொண்டுவருவீர்கள்?
சந்தேகநபர் என்ற வகையில், அவர் இன்னமும் எமது நாட்டு நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
அவர் நாட்டை விட்டு வெளியேறி 8 வருடங்கள் ஆகிவிட்டன. இதுதொடர்பாக அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியும் என்ன பதில் கூறப்போகிறார்?
இனியேனும், அவரை நாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்கப்பூருக்கு அரசாங்கம் இந்த விடயத்தை வலியுறுத்தினால், நிச்சயமாக அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.