களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) களுத்துறை பிரதான நீதவான் திருமதி நிதா ஹேமலி ஹல்பண்தெனிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
களுத்துறை நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 5 மாடி கட்டிடத்தில் ஜன்னல் வழியாக விழுந்து 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து சிறுமி வீழ்ந்த போது அறையில் இருந்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், அவருடன் விடுதிக்கு சென்றதாக கூறப்படும் களுத்துறை வடக்கை சேர்ந்த 23 வயது இளைஞர் மற்றும் களுத்துறை நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.