கொட்டாவை – சித்தமுல்லை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்குக் காரில் வந்த நபர் ஒருவர், சுமார் 21,320 ரூபாய் பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டுப் பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் குறித்த காரின் இலக்கத்தகடும் போலியானது எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.