பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் உள்ள பாலிஸ்டா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்று திடீரென இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளமை பிரேசிலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாகக் கடும் மழைபெய்து வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு குறித்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 3 பேரைக் காணவில்லை எனவும் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த குடியிருப்பு சேதமடைந்து மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி 2010ம் ஆண்டு மூடப்பட்டதாகவும், அதன்பின்னர் பல குடும்பங்கள் சட்டவிரோதமாக அங்கு குடியிருந்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.