யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவு தினமானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது.
இதன் போது அங்கு பங்குத்தந்தையின் தலைமையில் விசேட வழிபாடுகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்களும் பொதுமக்களும் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது, விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசின.
இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 147 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர் என்பதும் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.