யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடலில் நீராடச் சென்ற ஆறு வயதுக் குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக குழந்தை உட்பட பெற்றோர் அண்மையில் நாடு திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தாயும் தந்தையும் குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுச் சென்றதாகவும், அங்கு விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தை தங்கியிருந்த உறவினரின் வீடு கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், குழந்தை யாருக்கும் தெரியாமல் கடலுக்கு நீராடச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் அப்பகுதி மக்களை குழந்தையை காப்பாற்றி மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்துள்ளது.