மேற்கு வங்காளத்தில் கடந்த 8 ஆம் திகதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலின்போது பெரும்பாலான இடங்களில் வன்முறைச்சம்பவங்கள் வெடித்ததோடு வாக்குப்பெட்டிகளும் சூறையாடப்பட்டன. அத்துடன் தேர்தல் அதிகாரிகளும் தாக்கப்பட்டனர்.
இதனையடுத்து 697 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்றைய தினம் மறுதேர்தல் நடைபெற்றது. எனினும் ஹவுராவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வெளியே கூடியிருந்த கும்பலொன்று திடீரென வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றதால் பாதுகாப்புப்படை வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தும் விதமாகத் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் இத்தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 20பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.