வாடகை தந்தை (RENT A DAD) என்ற புதிய சேவையொன்று இணையத்தைக் கலக்கி வருகின்றது. சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லியோனிங் மாகாணத்தில் இருக்கும் குளியல் இல்லத்திலேயே (Bathhouse) இச்சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சேவையானது ஆண் குழந்தைகளுடன் வரும் தாய்மாருக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்குளியல் இல்லத்தின் உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில் “குளியல் இல்லத்திற்கு வரும் தாய்மார்கள் தங்களின் ஆண் குழந்தைகளை எமது வாடகைத் தந்தைகளிடம் கொடுத்து விட்டு சுதந்திரமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீச்சல் குளத்தில் எந்த பயமும் இல்லாமல் குளிக்கலாம்.
உங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வாடகை தந்தை, ஆண்கள் குளிக்கும் நீச்சல் குள பிரிவிற்கு குழந்தையை அழைத்துச் சென்று அவரது மகனைப் போன்று நீராட்டிப் பராமரித்துக் கொள்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
இச்சேவைக்கு அக்குளியல் இல்லத்தில் இதுவரை எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.