உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து வைத்து, ஹொங்கொங்கிற்குக் கடத்த முயற்சி செய்த பெண்ணை சீனாவின் சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர்.
சீனாவுக்கும் ஹொங்கொங்கிற்கும் இடையிலான எல்லைப் பகுதியான குவாங்டாங் மாகாணம், புக்சியன் துறைமுகத்திலிருந்து ஹொங்கொங்கிற்குச் செல்ல முற்பட்ட போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது மேல் உள்ளாடையில் மார்பகங்களுக்கு இடையே 5 பாம்பு குட்டிகளை வெவ்வேறு துணிப் பைகளில் கட்டி மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அப்பெண்னைக் கைதுசெய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.