குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ‘ வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் மூலம், நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள், விவசாயத்தில் ஈடுபடும் பெண்கள், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும்பெண்கள், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும்பெண்கள் என இலட்சக்கணக்கானவர்கள் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர் வரும் 17 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.