பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் அமெரிக்க டொலரை பிணையெடுப்புக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின்னர், பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்பும், அரசாங்கங்களின் தவறான பொருளாதார கொள்கையும் அந்த நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ச்சியாக பாதித்தது.
இதனால், தமது நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதிக்கான நிதியின்மை மற்றும் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைமை உள்ளிட்ட பல நெருக்கடிகளை பாகிஸ்தான் எதிர்நோக்கியது.
இதனையடுத்து தமது நட்பு நாடான சவுதி அரேபியாவிடம் இருந்து 2 பில்லியன் டொலரை பாகிஸ்தான் பெற்றிருந்தது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரியிருந்தது.
அந்தவகையில், பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் அமெரிக்க டொலரை பிணையெடுப்புக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளது.
இதில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலரை முதல் தவணையாகவும், ஏனைய தொகை 9 மாதங்களில் செலுத்தப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
ஐ.எம்.எப். இன் இந்த பிணையெடுப்பானது தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்த்திரப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளதாக பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.