யாழில் சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளைத் திருடிய குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்றைய தினம் (புதன்கிழமை ) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற உற்சவத்தின் போதே குறித்த ஐவரின் தொலைபேசிகளும் களவாடப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அதே ஆலயத்தில் பணிபுரியும் 25 வயதான பூசகரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.