மயானத்தில் பாதி எரிந்த நிலையில் இருந்த யுவதியின் உடலை இருவர் உட்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாமுன் பந்தாசாஹி கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுந்தர் மோகன் சிங் (58) மற்றும் நரேந்திர சிங் (25) ஆகியோரே இவ்வாறு மதுபோதையில் உடலை உட்கொண்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை 25 வயதான யுவதி ஒருவரின் சடலம் குறித்த மயானத்தின் தகன மேடையில் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த இருவரும், பாதி எரிந்த நிலையில் இருந்த யுவதியின் சடத்தை உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த யுவதியின் உறவினர்கள் குறித்த இருவரையும் பிடித்து மின் கம்பத்தில் கட்டிவைத்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர் இது குறித்து பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் ”திருமணமாகாத பெண்ணின் இறைச்சியை உட்கொள்வது தங்களுக்குச் சக்தியைத் தரும் என எண்ணியே சடலத்தை உட்கொண்டதாக அவர்கள் தெரித்திருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















