நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று கூடியுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கை நேரப்படி நண்பகல் 12.00 மணிக்கு இந்தக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு ஒன்று கூடி எதிர்வரும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதுடன், பல சட்டமூலங்கள் குறித்தும் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கடந்த 13 ஆம் திகதி கூடி, நாடாளுமன்றம் நாளை முதல் 21ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுங்கச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன.
மேலும், ஊழலுக்கு எதிரான மசோதா மற்றும் குற்றச் சட்டத்தின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் ஆதரவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான வாய்ப்பு விவாதத்தை நடத்த குழு முடிவு செய்துள்ளது.
ஆதனைத் தொடர்ந்து மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் பிரேரணைக்கு விவாதம் இன்றி அங்கீகாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்கி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் நடைபெறும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.