பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஐந்து விசேட மருத்துவர்கள் அடங்கிய குறித்த ழு அண்மையில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.
குறித்த தடுப்பூசி போடப்பட்ட மேலும் இருவர் ஒவ்வாமை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.