ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.