இந்திய ரூபாயில் வர்த்தகத்தை அனுமதிக்கும் வகையில் வொஸ்ட்ரோ ரூபாய் கணக்குகளை தொடங்க 18 நாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன.
சீனா ஏற்கனவே யுவானை உலகமயமாக்கும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில் அவர்களுடன் ஒப்பிடும் போது ரூபாயை சர்வதேசமயமாக்குவதில் இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.
ரூபாயை சர்வதேசமயமாக்கும் நடவடிக்கையானது, ரஷ்யா அல்லது பிற நாடுகளின் மீதான அமெரிக்கத் தடைகளுடன் தொடர்புடையது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக மட்டும் அல்லாமல் ரூபாய் மற்றும் ரூபள் செலுத்தும் அமைப்பு ஒரு நீண்ட கால நடவடிக்கையாக பார்ப்பதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீதான அமெரிக்கத் தடைகளுக்குப் பிறகு, பல நாடுகள் இப்போது மாற்றுக் கட்டண முறையை அமைப்பதில் தீவிரமாக உள்ளன நிலையில் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியப் பொருளாதாரம் மிகவும் வெளிப்படையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலரை மாற்றுவது என்ற யோசனை எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்பதனால் அமெரிக்க டொலரை சார்ந்து இல்லாத மாற்று கட்டண முறையை அமைப்பதை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் மூத்த அரசாங்க அதிகாரி கூறியுள்ளார்.
அமெரிக்க டொலரோடு தொடர்புடைய தடைகள் அமுலாகும் போது காலப்போக்கில் அது டொலரின் மேலாதிக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயம் உள்ளது என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெல்லன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.