நியுஸிலாந்து ஒக்லாந்தின் மையப்பகுதியில் பீஃபா மகளிர் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கட்டுமாணப் பணிகள் இடம்பெற்ற பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் காவல்துறை அதிகாரிகள், 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய நபரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தை ஒரு பயங்கரவாத சம்பவமாக, கருத முடியாது என நியுஸிலாந்து பிரதமர் கிரிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மகளிர் உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.