ரஷ்யாவைச் சேர்ந்த 35 நிறுவனங்களுக்கு அவுஸ்திரேலிய அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யா கடந்த 17 மாதங்களாக உக்ரேன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட உலகநாடுகளின் உதவியுடன் உக்ரேன் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் தற்போது இணைந்துள்ள அவுஸ்திரேலியா ரஷ்யாவின் 35 நிறுவனங்கள் மற்றும் ரஷ்யாவில் முன்னாள் துணை பிரதமர்களான ஆண்ட்ரே பெலோசோவ், டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் பெலாரசில் உள்ள இராணுவ உயர் அதிகாரிகள் என 10 தனிநபர்களுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.