செமில்லா என்ற முற்போக்கு அரசியல் கட்சி அலுவலகங்களை குறிவைத்து குவாத்தமாலா பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் பெர்னார்டோ அரேவலோ எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் எதிர்பார்ப்புகளை மீறி இந்த சோதனை நடவடிக்கைள் இடம்பெற்றுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கைகள், குவாத்தமாலாவின் சட்டமா அதிபர் அலுவலகத்தின் அரசியல் துன்புறுத்தல் என பெர்னார்டோ அரேவலோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சோதனையானது மிரட்டலைத் தொடர்வதற்கும் எங்களை பயமுறுத்துவதற்கும் ஒரு முயற்சி என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.