மத்திய துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் மத்திய துருக்கியில் நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் அதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துருக்கியில் மட்டும் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் அழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















