சுமந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகள், நாட்டில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல்களைளையும், ஜனாதிபதித் தேர்தலையும் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸாமில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொலிஸ் அதிகாரம் இல்லாமல் ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க, ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார் என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளவே ஜனாதிபதி இவ்வாறு செயற்படுகிறார் என்பது தெளிவாகிறது.
சுமந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகள், நாட்டில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல்களைளையும், ஜனாதிபதித் தேர்தலையும் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுகிறார்கள்.
இந்த ஜனாதிபதிக்கு மக்கள் ஆணையும் கிடையாது. 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தவும் மக்கள் ஆணை வழங்கியது கிடையாது.
தற்போது ஜனாதிபதி சர்வக்கட்சி மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதிகாரங்களை பகிர்ந்தளித்து ஒருபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால், வடக்கில் தமிழ் – முஸ்லிம்களுக்கிடையே காணிப் பிரச்சினை ஏற்படும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறி, இவ்வாறு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் நாட்டில் இருக்கும் நல்லிணக்கத்தையும் பாதித்துவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.